தோட்டம் நலன்புரி நிலையத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாகவும், அதனால் அந்தப் பகுதி முழுமையாக அழிந்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா அரசாங்க அதிபரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு தமது அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை என்றும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.சில வாரங்களுக்கு முன்னர் இந்த நலன்புரி நிலையத்தில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாவது சம்பவம் விபத்தா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றா என்பது குறித்து அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Wednesday, August 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment