பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே படையினர் யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.வெகுவிரைவில் வடக்கை விடுவித்துவிடுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.ருவன்வெல்லவில் நேற்று(18) பிற்பகல் நடத்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகியோர் அனைவரும் இந்த நாட்டில் அமைதியாகவும் சகோதரர்களாகவும் வாழவேண்டுமென்ற அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது
இனம், மதம், சாதி, கொள்கை, அரசியல் நலன்கள் ஆகியவற்றுடன் ஒரே குடும்பமாக இந்த நாட்டில் வாழ்வதற்கேற்ற சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப் பட்டுவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
படையினர் யுத்தத்தை முன்னெடுப்பதால் அவர்கள் பயங்கரவாதப் பிடியிலிருந்து பல பிரதேசங்களை விடுவித்து வருகின்றனர்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மக்கள் தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் தான் பின்னிற்கப்போவதில்லை நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.
No comments:
Post a Comment