Wednesday, August 13, 2008

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தீவிபத்து

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாகவும், அதனால் அந்தப் பகுதி முழுமையாக அழிந்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா அரசாங்க அதிபரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு தமது அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை என்றும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.சில வாரங்களுக்கு முன்னர் இந்த நலன்புரி நிலையத்தில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாவது சம்பவம் விபத்தா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றா என்பது குறித்து அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் அவலங்களுக்கு புலிகளே பொறுப்பு- ராசப்பு ஜோசப்பு!

கடந்த 25 வருட கால வரலாற்றில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்புக் கூற வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான சன்டே ஒப்சேவர் ஆங்கில வாராந்த இதளுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே ஆயர் இவ்வாறு கூறியுள்ளார்.அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர். அவ்வாறு கூறி வருவது புலிகளின் சொந்தக் கருத்தாகும். புலிகளுக்கு ஆதரவாக நான் எந்த கருத்தையும் ஒருபோதும் வெளியிடவில்லை. அப்பாவித் தமிழ் மக்கள், புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் அதிருப்தயடைந்துள்ளனர். அவர்களைப் போன்றே நானும் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியுடனேயே இருக்கிறேன் என்றும் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

குடிவரவு சட்டவிதிகளை மீறிய இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்


மாணவர் வீசா ஒன்றின் மூலம் பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவரை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர்.
குறித்த இலங்கையர் நொர்ட்ஹெம்டனில் உள்ள இரவுநேரக் கேளிக்கை விடுதியொன்றில் பணியாற்றி வந்துள்ளமை விசாரணைகளை மூலம் தெரியவந்துள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வந்து மீண்டும் லண்டன் திரும்பிய சந்தர்ப்பத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டன் பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வி கற்பதாகவும், அதற்கான ஆவணங்களையும் குறித்த இலங்கையர் சமர்ப்பித்துள்ளார். எனினும், தீவிர விசாரணைகளை மேற்கொண்ட எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதனைக் கண்டு பிடித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஐக்கிய இராச்சியத்தில் வெளிநாட்டவர்கள் தொழில் புரிவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென அந்நாட்டு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மாணவர் வீசாக்களைப் பயன்படுத்தி முழு நேரத் தொழிலில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த வருட இறுதியில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பிரித்தானியாவில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பிலான சட்டவிதிகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் தொடரும் பேரவலம் உதவி புரியுமாறு புலம்பெயர் மக்களிடம் உதவி கோருகிறது.


வன்னி பெருநிலப்பரப்பில் தொடரும் யுத்தத்தினால் வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாக மரணத்தின் விளிம்பில் நிற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி புரியுமாறு புலம்பெயர்ந்து வாழும் மக்களை மன்றாடிக் கேட்டுக் கொள்வதாக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தொண்டு நிறுவனமான செடோட் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ் மக்களின் பாதுகாப்பு வலயமாகத் திகழும் வன்னிப்பகுதியை இன்று போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. வீடுகள் பாடசாலைகள் கோவில்கள் வயல்நிலங்கள் என இவை யாவும் இலங்கை அரசினால் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிர்க்கதியாக மரங்களின் கீழ் வெய்யிலிலும் மழையிலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பசியால் கதறும் பாலகர்களின் அழுகுரல், அந்தத் துயரம் தாங்காத பெற்றோரின் கவலை, தள்ளாத முதுமை மற்றும் நோயுடன் முதியோர் என்று போர் எல்லாத் தரப்பினரையும் அவலத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் புலம் பெயர்ந்த உறவுகள் தங்களாலான உதவியை அல்லலுறும் மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றும் செடோட் தனது அறிக்கையில் கோரியுள்ளது.

10 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை

கடந்த 9 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 10 பேர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.தமிழக முதலமைச்சர் இவ் விடயம் குறித்து மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த்தையடுத்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுக்க விழுமியமுள்ள மனிதர்களாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி சாத்தியம் - கெஹலிய

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஒழுக்க விழிமியமுள்ள மனிதர்களாக நடந்துகொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி தொடர்பில் சிந்திக்க முடியும் என்று அமைச்சரும் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துக்கூறிய அவர் தெரிவித்ததாவது: புலிகள் இயக்கம் பலவீனமடையும்போது சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல்வேறு ஆழுதங்கள் பிரயோகித்து பேச்சுவார்த்தை என்ற தோரணையில் தம்மை மீள கட்டியெழுப்புவதே வரலறாகவுள்ளது. இதனை நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேம தாஸாவின் காலத்தில் ஹில்டன் ஹொட்டலில் பல மாதங்களாக சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. இறுதியில் புலிகளால் 600க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உபாயத்தை அடிக்கடி புலிகள் கையாண்டுவருகின்றனர்.

Tuesday, August 12, 2008

அரசாங்கத்தை கவிழ்க்க – பிரபா – றணில் - லால் கூட்டு –சாடுகிறார் - நிமால்

முல்லைத்தீவுக் காட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபாகரனுக்கு ஒக்சிஜன் மற்றும் சேலைன் கொடுக்க ரணில் விக்கிரமசிங்கவும் லால்காந்தவும் முயற்சிப்பதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். பிரபா- ரணில் - லால் ஆகிய இந்த திரித்துவத்தின் தேவை இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதாகும். இதற்காக அவர்கள் கடந்த ஜூலை 10 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பொன்றை மேற்கொண்ட போதும் அது தோல்வியடைந்ததால் பிரபாகரனுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி இல்லாமல் போனதுடன் படையினரின் தோல்வி தவிர்க்கப்பட்டது. உழைக்கும் முற்போக்கு மக்கள் இந்த சூழ்ச்சியை தோற்கடித்தனர். அத்துடன் மீண்டும் பணிப்புறக்கணிப்பொன்றை மேற்கொண்டு புலிகளுக்கு சேலைன் கொடுத்து காட்டிக் கொடுக்கும் முயற்சியை மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். முற்போக்கு சக்திகள் ஜனாதிபதியை சூழ்ந்து கொண்டுள்ளதால் முல்லைத்தீவுக் காட்டில் இறுதி மூச்சினை இழுத்துக் கொண்டிருக்கும் பிரபாகரன் நிரந்தர தூக்கத்தை அடைவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து முனைகளில் இராணுவம் முன்னேறுகிறது; புலிகளுக்கு இது புது அனுபவம் - 'பொட்டொம் லைன்'


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் இலங்கை இராணுவத்தினர் ஐந்து முனைகளினூடாக முன்னேறி வருவதாக கொழும்பு ஆங்கில வார இதழின் செய்தியாளர் ருவான் வீரக்கோன் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொட்டொம் லைன் வார இதழில், களமுனையிலிருந்து அறிக்கையிடப்படுவதாகக் கூறி வெளியிடப்பட்டுள்ள விசேட களநிலைவர அறிக்கையிலேயே இந்த விபரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
4ஆவது ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தச் சண்டையில் இராணுவத்தினர் ஐந்து முனைகளில் முன்னேறி வருவதாகவும், இதற்கு முன்னர் இத்தகையதொரு நடவடிக்கைக்குப் புலிகள் முகம் கொடுத்ததில்லை எனவும் ருவான் வீரக்கோன் என்ற அந்தச் செய்தியாளர் தனது களமுனை ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயசிக்குறு படை நடவடிக்கையைத் தவிர, முதலாம், 2ஆம், 3ஆம் ஈழப்போர்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் படை நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஒரு முனையினூடாகவே முன்னேறியதாகக் குறிப்பிடும் அவர், இதனால், புலிகளும் ஒரே முனையில் தமது பலத்தைத் திரட்டி இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக இருந்ததாகவும் தனது அறிக்கையில் ருவான் குறிப்பிடுகிறார்.
வன்னிவிளாங்குளத்தைக் கைப்பற்றிய இராணுவத்தினரின் 57ஆவது படைப்பிரிவைச் சேரந்த 571, 572 மற்றும் 573ஆவது விசேட பிரிகேட் அணிகள், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் ஆகிய பிரதேசங்களை நோக்கி தந்திரோபாய முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தனது அறிக்கையில் விபரிக்கிறார்.
இதுதவிர, ஏ-9 வீதியின் கிழக்குப் பக்கமிருந்து இரண்டாவது அதிரடிப்படைப் பிரிவும், மன்னாரின் வடபகுதியிலிருந்து 58வது படைப்பிரிவும், வெலி ஓயாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி 59ஆவது படைப்பிரிவும் முன்னேறி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகல் வேளையில் மட்டுமல்லாமல் இரவு வேளைகளிலும் கூட படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களமுனையில் நிற்கும் படையினர் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிடும் அந்தச் செய்தியாளர், படையினர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து காடுகளுக்குள் மறைந்திருந்து தாக்கும் உத்திகளைக் கடைப்பிடித்து வருவதாகவும் விபரித்துள்ளார்.
“இராணுவத்தினர் இப்போது முன்னணி பாதுகாப்பு நிலைகளைக் (Forward Defensive Lines)கொண்டிருப்பதில்லை. பதிலாக, முன்னணி தாக்குதல் நிலைகளையே கொண்டிருக்கின்றனர்;(Forward Offensive Lines)” என்று களமுனையிலிருக்கும் மூத்த அதிகாரியொருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ருவான் வீரக்கோன் தனது களமுனை அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
தற்போதைய படை நடவடிக்கையில் மாங்குளம் பிரதான மையமாக விளங்குவதாகக் குறிப்பிடும் ருவான், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு பிரதான நகரங்களுக்குமான பாதைகளின் மையமாக மாங்குளம் விளங்குவதால் அதைக் காப்பாற்றுவதற்கு புலிகள் கடும் பிரயத்தனம் எடுப்பார்கள் என்றும் விபரித்துள்ளார்.
மல்லாவி, துணுக்காய், மாங்குளம் ஆகிய பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டால் அதன் பின்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு சுமார் 20 - 25 கிலோ மீற்றர்களே இருப்பதாகவும் ருவான் வீரக்கோன் தனது களமுனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வேலைத்திட்டத்தை கொழும்புக்கும் வன்னிக்கும் விஸ்தரிக்கவுள்ளோம்-கருணா அம்மான்


தமது கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை கொழும்புக்கும் வன்னிக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். "கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் கொழும்பில் இருப்பதன் காரணமாக அங்கும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். அதேநேரம் எமது அரசியல் வேலைத்திட்டத்தை வன்னிக்கும் விஸ்தரிக்கவுள்ளோம்" என்றும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஏனைய அரசியல் கட்சிகளுடன் தான் ஏற்கனவே நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் புதிய நிருவாகக் கட்டமைப்பின்கீழ் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் அரசியல் ரீதியான சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிப்பதற்கு கட்சியின் அரசியல்பீடம் முடிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் கிரிஷ்ணானந்தராஜா கட்சியின் செயலாளராகவும் ஜெயம் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும் பாரதி அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் மார்க்கன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் மங்களன் மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதாகவும் அவர் பொலனறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.தமது கட்சியின் உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த சில மாதங்களாக மதிப்பீடுகளை மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்ட அவர் மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கத்திடம் நிதியுதவியைக் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இரண்டு கிராமங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவிப்பு.

இராணுவ படையணிகள் கிளிநொச்சியில் இரண்டு கிராமங்களையும் வவுனியா பாலமோட்டைப் பகுதியில் உள்ள பலமிக்க பதுங்குகுழி மற்றும் யுத்த அகழி ஆகியவற்றை நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த மோதல்களில் 29 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினர் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை படையினர் கிளிநொச்சி கச்சிக்குடா கிராமத்திற்குள் பிரவேசித்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். கச்சிக்குடா பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலில் படைச்சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் காயமடைந்துள்ளார். எனினும் கிளிநொச்சிக் கிராமங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டமை குறித்த படையினரின் அறிவிப்பு தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிடம் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் வெளியாகவில்லை.

மடு அன்னையின் கோவிலுக்குச் செல்ல தென்பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக, மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள்.

புலிகளிடமிருந்து இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலில் மடு அன்னையின் திரு உருவச் சிலை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதையடுத்து, மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழாவையொட்டி அங்கு செல்ல விரும்பும் தென்பகுதியில் உள்ள பக்தர்களுக்காக மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மடுக்கோவிலைத் தூய்மைப்படுத்தும் சமயக்கிரியைகள் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டு, மடு அன்னையில் திரு உருவச் சிலை அதனுடைய பீடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவித்தார்.
எனினும்
மதகுருமார்களைத் தவிர்ந்த வேறு எவரும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு நேற்று படையினர் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மடு அன்னை மீண்டும் மடுக்கோவில் பிரதிஸ்டை செய்யப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாரவில பகுதியில் இருந்து மூதாட்டி ஒருவர் மதவாச்சி மன்னார் வீதியில் உள்ள மடுக்கோவில் சந்தியில் வந்து காத்திருந்ததாகவும், எனினும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தினால் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்காக தென்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மதவாச்சியைச் சென்றடைந்த சில பக்தர்களை பொலிசார் அங்கிருந்து 2 பஸ் வண்டிகளி;ல் மடுக்கோவிலுக்கு அனுப்பி வைத்ததாக மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றிற்கு 200 பக்தர்கள் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள அதேவேளை, மடுக்கோவிலுக்குச் செல்பவர்கள் அதே தினம் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என படையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழா நடைபெற மாட்டாது என்றும், காலை நேரத்தில் மாத்திரம் பூஜை நடைபெறும் என்று மன்னார் ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

Monday, August 11, 2008

பிரபாகரனின் ஊடகக் குண்டு சிரச – களனிக்காக உதித்த தேவன் மேர்வின்


சிரச ஊடகவியலாளர்கள் இருவரை தாக்கி இரண்டு ஒளிப்பதிவு கருவிகளை பறித்துச் சென்ற மேர்வின் சில்வாவுக்கு ஆதரவாகவும் சிரச தொலைக்காட்சியினருக்கு எதிராகவும் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. களனி தொகுதியில் இருந்து பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இது ஜனாதிபதியின் சக்தி, அமைச்சர் மேர்வின் சில்வாவின் பலம், துட்டகைமுனுவின் பலம் என ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். அத்துடன் சிரச ஊடகத்தை மூடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தவிர பிரபாகரனின் ஊடக குண்டு சிரச எனவும் மேர்வின் களனி தொகுதிக்காக உதித்த தேவன் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் தமது ஆதரவினை வழங்கியிருந்தமை ஆர்ப்பாட்டத்தின் போது நன்கு உணரமுடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்


வீ. ஆனந்தசங்கரி
முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மையில் இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலால் ஒன்றரை வயது குழந்தையை பலி கொண்டதோடு 18 அப்பாவி பொது மக்களும் படுகாயமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும், சில வீடுகள் சேதத்துக்குள்ளானதாகவும் அறிய வருகிறது. இதேபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தையை அல்லது தமது உறவினர் ஒருவரை இழப்பவர்களாலேயே இந்த இழப்பின் வேதனையை உணர முடியும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டார்கள் என்பதைத் தவிர இவர்கள் சமூகத்திற்கு செய்த குற்றம் என்ன? இவ்வாறு துன்பப்படும் மக்களின் துன்பத்தை போக்கி நிம்மதி பெருமூச்சுவிட வைக்க முடியாவிட்டால் நாம் பௌத்த தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம் என்று எவ்வாறு கூற முடியும்? எது நடப்பினும் யுத்தம் தொடர வேண்டுமென்று வாதாடுகின்றவர்கள் இன்றும் நம் நாட்டில் வாழ்கின்றார்கள். இனப்பிரச்சனை தீர்விற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருப்பவர்களும் அவர்களே. துரதிஷ்டவசமாக நம் நாட்டின் நிலைமை இதுதான். இந் நாட்டையும் அந்த நாட்டின் மக்களையும் நேசிக்கும் நாட்டுப்பற்றாளனாகிய நான் ஓர் உயிரைத்தன்னும் வீணாக இழக்க விரும்பவில்லை. நம் நாட்டில் சரியாக கணிப்பிடின் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற இந்த யுத்தத்தில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வடகிழக்கில் இடம்பெயர்ந்து பல துன்பங்களை அனுபவித்துள்ளனர். முறையான உணவு, உடை, இருப்பிடம், சுகாதார வசதி அன்றி வாழ்வதோடு தமது சொத்துக்களை முற்றாக இழந்தும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்களே. விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அனைவரையும் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றதுபோல் ஆகிவிட்டது. இன்று தாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என நன்கு அறிந்தும் உண்மை நிலையை நேர்மையாக மக்களுக்கு தெரிவித்து ஒருதலைபட்சமாக வேனும் யுத்த நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி, ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும். அதேபோன்று அரசும் செயற்பட்டு விமானத் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுடன் செயற்படாத பட்சத்தில் அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் அரசாங்கம் தம் மக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறுமேயானால் அரசாங்கம் தனது மதிப்பை இழந்து விடும்.மிக விரைவில் கிளிநொச்சியிலும் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலைமை உருவாகும். ஏற்கனவே பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் பலாத்காரமாக கிளிநொச்சிப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்காக இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம், உணவு, சுகாதார வசதி ஆகியவை செய்யப்பட வேண்டும். அதேவேளை விடுதலைப்புலிகள் தமது இரும்பு கதவை திறந்து மக்கள் தம் இஷ்டம்போல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும். குடாநாட்டில் இருந்து வன்னியில் பலாத்காரமாக குடியேற்றப்பட்டவர்கள் அனுமதி வழங்கப்பட்டால் தம் சொந்த வீடுகளுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு உண்டு. அதேபோன்று அரசும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் மக்கள் தமது பகுதியை வந்தடைய ஏதுவாக ஆதரித்து உதவ வேண்டும். ஆகவே யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் இக்கட்டான இக் கட்டத்தில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கும் தொடர்ந்து பிறநாட்டில் சுற்றுலா செய்வதற்கும் ஏதுவாக அண்மையில் பாராளுமன்றத்தில் மூன்றுமாதகால விடுமுறை கேட்டுப் பெற்றமை கண்டிக்கப்பட வேண்டும். வீ. ஆனந்தசங்கரி தலைவர்-த.வி.கூ

வாராது வந்துற்ற சந்தர்ப்பங்களை எல்லாம் புறந்தள்ளி சீர்குலைத்து தற்போது பட்டு வேட்டிக் கனவில் கட்டிய கோவணத்தையும் காற்றில் பறக்கவிட்டு நிற்கிறார்கள் பு


ஒரு நீதியான நேர்மையான போராட்டத்தை அறம் சார் தத்துவங்களின் அரசியல் கொள்கைகளே வழிநடத்தும்.
தற்போதைய நிலவரங்கள் பற்றி புலிகளின் அரசியல் துறைப்பேச்சாளர் நடேசன்; இராணுவ முன்னேற்றத்தை தடுப்பதற்கான சகல தந்திரோபாயங்களையும் பாவித்தாயிற்று, புதிய தந்திரோயங்களை பாவிக்கவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார். சில சில நாட்களுக்கு முன்னர் புலிகளின் இணையமொன்றில் அவரின் அறிக்கை பிரசுரமாகியிருந்தது. படையினர் கம்பளம் விரித்தது போல் வருகிறார்கள் என்று அதற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் சு. ரவி குறிப்பிட்டிருந்தார். அவர்கள் அரச படையினர் நூல் பந்திலிருந்து நூல் வருவது போல் வருவார்கள் என எதிர்பார்த்திருந்தனர் போலும். உலக நாடுகளிலிருந்து நவீன ஆயுதங்களை வாங்கி குவித்துத் தான் தமக்கெதிராக வெற்றிகரமாக தாக்குதல் நடத்துகிறார்கள் என்று புலிகள் அரற்றுகிறார்கள். ஆனால் பிரதான உண்மை அதுவல்ல. கடந்த 30 வருடங்களில் படையினர் புலிகளிடமிருந்து கற்றிருக்கிறார்கள். புலிகளே அவர்களின் பிரதான ஆசான்களாக இருந்திருக்கிறார்கள். இன்று படையினர் பாவிக்கும் சாம,பேத,தான, தண்ட முறைமைகள் எல்லாம் புலிகளிடம் இருந்து கசடற கற்றறிந்தவை. இந்த அனுபவ பாடத்துடன் அவர்கள் புலிகளை விஞ்சி பல படி மேலேயே நிற்கிறார்கள்.
ஒரு நீதியான நேர்மையான போராட்டத்தை அறம் சார் தத்துவங்களின் அரசியல் கொள்கைகளே வழிநடத்தும். புலிகளை வழி நடத்தியது பாசிசம். மனித குலத்தின் சிறந்த விடயங்கள் எல்லாம் எமக்கு உவப்பாக இல்லையென்றால் அழித்து விடுதல் என்பதே அது. இந்த வரலாற்றுத் தவறின் முட்டு சந்தில் அவர்கள் இன்று நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 1986 இல் எப்போது ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து மாற்று தமிழ் அமைப்புக்களின் இருப்புக்கெதிரான அழிச்சாட்டியத்தை தொடக்கி வைத்தார்களோ அன்றே ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு கொள்ளி சொருகப்பட்டது.இந்த கொள்ளி சொருகலை மெத்தப்படித்த மேதாவிகள் உட்பட தமிழர்களில் ஒரு கணிசமான பகுதியினர் ஆதரித்தனர். நெஞ்சில் மனிதாபிமான ஈரம் கசிந்த ஒரு சில தமிழர்களே குற்றுயிரும் குறை உயிருமாக ரெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டபோது இந்த மிலேச்சத்தனத்திற்கெதிராக முணுமுணுத்தனர். தொடர்ந்து புளொட் ,ஈபிஆhஎல்எப் சாதாரண முஸ்லீகள் ,சிங்களவர் என வாழ்வு இருப்பு எல்லாமே கேள்விக்குறியாக்கப்பட்டபோது தமிழ் அரசியல் தலைவர்கள், தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் ,இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி என படுகொலைகள் தொடர்ந்த போது விடுதலை வேள்வியின் ஒரு பகுதி, நெருப்பாற்றை நீந்திக் கடத்தல் என்னும் பெரும் பணி என புலி ஆதரவுத்தமிழர்கள் இறுமாந்திருந்தார்கள் .பிரபாகரன் ஒரு அவதாரபுருசன் 'கடவுள் முருகனுக்கே அவன் நிகரானவன்" என பதிகம் பாடினார்கள் . பதிகம் மட்டுமல்ல போர்ப்பரணியும் பாடினார்கள்.இப்போதென்னவென்றால் யாராவது பலம் கொண்ட மனிதன் கன்னத்தை பொத்தி அறைந்தால் தலைகிறுகிறுகிறுத்து நிற்பார்களே அப்படி தலை கிறுகிறுத்து நிற்கிறார்கள,; இந்த முட்டாள் தமிழர்கள் .ஒன்றும் தெரியாதா பாப்பாக்கள் போல் என்ன நடந்தது, ஏன் நடந்தது என விம்மி வெடிக்கிறார்கள் .பாழாய்பபோன இந்த தமிழர்கள் தமது வடஅமெரிக்க, ஜரோப்பிய இருப்புக்காகவும் வேறு சௌகரியங்களுக்காகவும் புலிகளை உசுப்பேத்தி பாசிசத்தை போசித்து வளர்த்தவர்கள், தாம் தான் என்பதை ஏனோ அடிக்கடி மறந்து விடுகிறார்கள். இவர்கள் சிங்கள படைகளின் மரணங்களில் மாத்திரமல்ல, வெடித்துச் சிதறும் தமிழ் சிறார்களின் மரணங்களிலும் கிறங்கிப் போய்கிடந்தவர்கள்.
'துள்ளித் திரியும் பருவத்திலே துடுக்கடக்கி பள்ளிக்கனுப்பாத தந்தையாகிய பாதகனே" என்று வயது வந்த பிள்ளை தனது தந்தையை நொந்து கொள்வதைப்போல இந்த பொறுப்பில்லாத தமிழரையும் நாளைய சந்ததி நொந்துகொள்ளும். கொலைகளை தமிழர்கள் கூச்சநாச்சமின்றி ஆதரிப்பதை கோயிலடியிலும் ,தேவலாயத்திலும் ,சாப்பாட்டு கடைகளிலும் காதில் நாராசமாக சர்வசாதாரணமாக கேட்கலாம்.இவர்களில் பலர் வெள்ளை வேட்டி திருநூற்று பூச்சுடன் இருப்பார்கள்.நீலன் திருச்செல்வம் சாகவேண்டிய ஆள்த்தான் என்று தேவாலய ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையிலிருந்து வெளியில் வந்து கூடும் போது சிலாகிப்பார்கள். வெள்ளிக்கிழமை கதிரேசன் கோயிலுக்குள்ளேயே மகேஸ்வரி சாகவேண்டிய ஆள்தான் என்று அளவளாவுவார்கள் . நெஞ்சில் உரனுமின்றி நேர்மை சிறிதுமின்றி வஞ்சனை செய்யும் இந்த வாய்ச்சொல் வீரர்கள் பஞ்சமா பாதகம் பற்றிய வேதாகம நூல்களையெல்லாம் வீட்டில் அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள் .நல்லூர் கோயிலில் திருவிழாவிற்கு 25 நாள் விரதம். ஆனால் பூங்கவனத்தல் அன்று சாகவைக்கப்படும் ஆட்டுக்கு இந்த 25 நாழும் முள்முருக்கங்குழை உட்பட நல்ல சாப்பாடுகிடைக்கும்.அறநிலை சாராத தமிழர்களின் கசாப்புக்கடைசிந்தனை தான் இங்கு பிரச்சனை. இந்த தமிழர்கள் எது பற்றி பெருமையடைந்தார்கள்? 30 ஆயிரம்பேருக்கு மாவீரர் சுடலை அமைத்ததைப் பற்றி பெருமை அடைந்தார்கள். ஆனால் முக்கியமான விடயம் இவர்களின் பிள்ளைகள் உற்றசுற்றம் யாரும் இச்சுடலைகளில் புதைக்கப்பட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த கொலைவெறி புரையேறிய தமிழர்கள் பிரபாகரன் ஆச்சரியங்களை நிகழ்த்துவார் எனக்காத்து கிடக்கிறார்கள். பாவம் வாய்பிழந்தே பழக்கப்பட்டுப் போனவர்கள். இவர்களுக்கு இங்கு நிகழும் மனிதப்பேரவலம் ஒரு பொருட்டல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் மனையிழந்து.. வாழ்விழந்து.. பீரங்கிக்குண்டுகளால் பின்னப்பட்ட வலையின் கீழ்...... வானமிடிந்து விழும் பேரோசை.... அதனையும் விஞ்சிய மனிதபேரவலக்குரல்...... இருளைப்பகலாக்கும் பீரங்கிக் குண்டுகளின் வெளிச்சத்தில்...... மரணமும் வாழ்வுமாக....... இருப்பவர்களை பற்றி சிந்திக்கவில்லை. இந்த பிரகிருதிகளுக்கு இந்த சபிக்கப்பட்ட மக்களை பிடிப்பதுமில்லை. இந்த மக்கள் தமது பாதுகாப்பு கருதி அரச கட்டுபாட்டு பகுதிக்குள் சென்று விட்டால் அடியோடு வெறுத்துவிடுவார்கள். இன்று நொந்து,கெட்டு தாம் உண்டு தம்பாடுண்டு என்று வாழும் கிழக்கின் மக்களையும் இவர்கள் அவ்வாறுதான் வெறுக்கிறார்கள்.மக்கள் பிரபாகரனுக்கு பதிவிரதைகளான பெண்டிராக இருக்கவேண்டும் என்று பாசிசம் தலைக்கேறிய பத்தாம் பசலிகள் கருதுகிறார்கள் .புலிகளின் பினாமிகளான ஊது குழல் ஊடகக்காரர்கள் பாசிசம் ஈடாட்டம் கண்டுவருவதையிட்டு பதட்டமடைந்திருக்கிறார்கள். சர்வதேச கப்பவசூல்காரருக்கும் வேதனைதான.; ஆனால் இதில் கிடைப்பதை சுருட்டிக்கொள்ளலாம் என்றும் பலர் காத்திருக்கிறார்கள். புலிகள் சார் கோயில் ,தமிழ் பள்ளிக் கூடம் உள்ளிட்ட மாபியாத்தொழில் காரர்களுக்கோ பெருங்கவலை. ஆனால் இலங்கையில் ஒரு உருப்படியான தீர்வு ஏற்பட்டு தமிழர்களும் சக சமூகங்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்று எத்தனை பேர் கருதினார்கள். தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ புலிப்பாசிசம் வாழ வேண்டும் என்பதே இவர்களில் பெருப்பாலானோரின் அங்கலாய்ப்பாகும் .ஆனால் வரலாற்றில் மனித குலத்திற்கு தீங்கிளைக்கும் ஒன்று தற்காலிகமாக வெற்றி பெறினும் நிரந்தராமாக தோலிவியுறும் என்ற விதி அவர்களுக்கு புரிவதில்லை புரிந்த கொள்ளவும் மாட்டார்கள்.முல்லைத்தீவு நகரத்தில் குண்டு விழுந்து மாவட்டதின் சம்பிருதாய முதற்பிரசையான அரச அதிபர் உட்பட 18 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததும், குழந்தையொன்று மரணித்ததும் அவலமானதும் துயரமானதுமே. இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான அவலங்கள் கடந்து வந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்து விட்டன. சராசரி இராணுவ ஆட்சியை விஞ்சிய வன்முறை சூழலில் தான் மக்கள் வாழ்ந்து மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பேரினவாத அரசுகள் மாத்திரம் பாத்திரவாழிகளாக இருக்கவில்லை. பாசிசப்புலிகளும் தான் பாத்திர வாழிகள். மக்கள் கௌரவமாக வாழ்வதற்கு இந்தியாவின் அனுசரணையுடன,; நாட்டின் உள்ளார்ந்த ரீதியலேயே சர்வதேச அனுசரணையுடன் எத்தனை சந்தர்ப்பங்கள் கிடைத்தன. எல்லாவற்றையும் புலிகள் நிராகரித்தபோது, சீர்குலைத்தபோது கைகொட்டி ஆரவாரித்து வரவேற்றவர்கள் போதை தலைக்கேறிய சமூகப்பிரக்ஞை அற்ற மந்தை ரகத் தமிழர்கள். புலிகள் இந்திய படையுடன் மோதியபோது ,பிரேமதாச வடக்கு-கிழக்கு மாகாணசபையைக் கலைத்தபோது ,வடக்கு-கிழக்கு மாகாண சபை உருவாகுவதற்கு முன்னின்றுளைத்த தோழர் பத்மநபாவும் தோழர்களும் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டபோது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக இலங்கையில் அதிகாரப் பகிர்விற்காக தம்மை அர்ப்பணித்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி புலிகளின் தற்கொலை குண்டுதாரியினால் படுகொலைசெய்யப்பட்டபோது ,அதிகாரப் பகிர்ந்தளிப்பிற்கான அரசியல் யாப்பை உருவாக்குவதில் பங்களித்த நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்;டபோது, சந்திரிகாவினால் முன்மொழியப்பட்ட அதிகாரப்பகிர்வு யோசனைகள் பாராளுமன்ற மேசையிலேயே தீயிட்டு எரிக்கப்பட்டபோது, இறுதியாக நோர்வேயின் முன்முயற்சியில் இனப்பிரச்சனை தீர்வாக சர்வதேச அனுசணையுடன் முன்வைக்கப்பட்ட சமஸ்டிமுறையை நிராகரித்தபோது எல்லாவற்றையும் தமிழீப்போராட்டத்திற்கு உரமேற்றும் அம்சங்கள் ,அதி புத்திசாலித்தனம் என இந்த தற்குறிகள் கூறியும் ,பிரசாரம் செய்தும் வந்தன.
இந்த ஜென்மங்கள் உலகம் முழுவதும் பரந்திருந்தாலும் இவை கிணற்று தவளைகளாகவும் இருந்தன.புலிகளின் பங்கர்கள் பபிலோனிய தொங்கு தோட்டங்களை விஞ்சிய உலக அதிசயமானவை. நாலு படையையும் நிர்வாகத்தையும் வைத்திருக்கும், அரசாக இருக்கும் ஒரே விடுதலை இயக்கம் அதுதான். உலகத்திலேயே பெரிய பத்திரிகையாளர் மாநாடு வன்னியில் பிரபாரன் கலந்து கொண்டது தான்;.பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை விட உலகில் நனிசிறந்ததெதுவும் கிடையாது அதிகூடிய தற்கொலை குணடுகளை வைத்திருப்பவர்கள் நாங்களே. உலகத்தில் தலை சிறந்த தத்துவ ஆசிரியர் அன்ரன்பாலசிங்கம் மாத்திரமே. .பெண்விடுலை பற்ற பேசுவதற்கு தகுதியானவர் அடேல் ஒருவரே. அரசபடையினரிடமோ பொலிசாரிடமோ பிடிபட்டால் உடனடியாவே உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரே இயக்கம் .கட்டுபாடும் ஒழுங்கும் கொண்ட ஒரே ஒரு இயக்கம்சிங்களவர்கள் முட்டாள்கள் தமிழர்கள் கெட்டிக்காரர்கள் மிகப்பிரமாண்டமான சுடலைகளும் எமதே.
எங்களை விட கெட்டிக்காரர்கள் உலகில் எவரும் இல்லை
இப்படியான வானம் கிணற்றின் வாயளவு என்று எல்லாவற்றையும் வன்னி பங்கரில் போட்டு உரசிப்பார்க்கும் மனோபாவம் பாரிய அளவில் வளாந்துள்ளதனால் இன்றைய நிலைமை புலிகளின் அடியார் திருக் கூட்டதிற்கு பேரதிர்ச்சியையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ' குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம்" என்ற மூடத்தனம் இந்த தமிழர்களை உடுக்கடித்து எங்கெல்லாமோ அலைக்கழித்து அழைத்துச் சென்றிருக்கிறது. அது கடைசியில் ரோமாபுரிக்கு அழைத்து செல்லவில்லை. உடுக்கடித்தவர்கள் தமிழர்வாழ்வை சுடுகாட்டுக்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் .என்றாலும் போதைபுரையேறிய தமிழர்கள் இன்னும் உடுக்கடி, வேப்பிலை, கற்பூரச்சட்டி, குங்குமம் பூசப்பட்டு கத்தி முனையில் காட்சியளிக்கும் எலுமிசிங்காய் மனநிலையிலிருந்து மீளவில்லை. ஆனால் ஒரு சமூகம் பிரமாண்டமான அளவில் அழிக்கப்பட்டிருகிறது. பௌத்த சிங்கள் பேரினவாதத்தை போசித்து வளர்த்ததில் தமிழ் பாசிசம் வகித்த பங்களிப்பு என்ற வெள்ளிடைமலையான உண்மையை இவர்கள் காண மறுக்கிறார்கள். போதாக்குறைக்கு புலித்தேவன் வேறு ஸ்ரீலங்கா அரசு ஜெனிவா ஒப்பந்தத்தின் விதிகளை அடிக்கடி மீறிவருவதாக குற்றம் சாட்டுகிறார். புலிகள் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு கட்டுபட்டவர்கள் இல்லை. நாம் பாசிசப்பயங்கரவாதிகள் என்று கூறவருகிறார் போலும். சிவிலியன் பஸ்களுக்கு- ரயில்களுக்கு குண்டுவைப்பது, ஊரோடு மக்களை துரத்துவது அரசியல் தலைவர்கள் மனித உரிமைவாதிகளை படுகொலைசெய்வதெல்லாம் ஜெனிவா உடன் படிக்கைக்கு உடன்பாடானவை என்று கூற வருகிறாரா. நாலுபடை வைத்திருப்பவர்கள், தமக்கென நிர்வாகம் -அரசு வைத்திருப்பவர்கள் ,உலக அதிசயம் நிகழ்த்துபவர்கள் நீங்கள் மக்களை மரங்களின கீழ் வாழவைப்பது தகுமா, மக்கள் குடியிருப்புக்கள் மேல் குண்டு வீச அனுமதிப்பது எந்தளவு நியாயம், உங்களை பாதுகாக்க மக்களை அரணாகப்பாவிப்பது எந்தளவிற்கு தார்மீகமானது. மக்களின் உணவு ,குடிநீர் ,சுகாதாரம் ,எரிபொருள் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும். மக்கள் வாழும் பிரதேசங்கள் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம்செய்யப்படவேண்டும் .இவற்றுக்காக ஜனநாயக அரசியல் கட்சிகளும் ,மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச உள்ளளுர் மனிதாபிமானப் பணியாளர்களும் குரல்கொடுக்கலாம.; ஆனால் புலிகள் குரல்கொடுக்கமுடியுமா . அவ்வாறு குரல் கொடுத்தால் அது அளவுக்கு மிஞ்சிய பாசாங்கல்லவா. தனக்கென ஒரு நிர்வாகத்தையும், நாற்படைகளையும், சர்வதேச ஆதரவையும் உலகத்தமிழர்களின ஆதரவையும் கொண்டிருப்பதாக கூறும் புலிகள் இவற்றுக்காக ஸ்ரீலங்கா அரசிடம் கையேந்துவானேன்? அவர்களின் தூதரகங்களுடாக(?) உதவியைப்பெற்று தமது துறைமுகங்களில் இறக்கி கொடுக்க வேண்டியது தானே. முட்டாள்த் தனமாககேள்வி எழுப்புகிறேன் என்று கருதவேண்டாம். எவ்வளவு தூரம் சனங்களை மடையர்கள் ஆக்கியிருக்கிறார்கள் என்பதற்காகவே இந்தகேள்வி இங்கு எழுப்பபடுகிறது. இந்த பாசிச போதையின் மத்தியில், சமூக அவலங்களின் நடுவில் தமிழ் ஜனநாயக சத்திகள் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை பாதுகாப்பதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன. ஊரை எரிப்பவர்கள் மத்தியில் வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக ஒரு கைவிளக்கையாவது ஏற்றிவைக்க முனைகிறார்கள். அண்மையில் பாரதப்பிரதமர் இலங்கை வந்த போது அனைத்து ஜனநாயகத் தமிழர்தரப்பினருமே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியில் தீர்வு ஏற்பட வழிசமைக்க வலியுறுத்தியதோடு வன்னியில் மக்கள் எதிர் நோக்கி நிற்கும் பேரலத்தையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. பாரதப்பிரதமர் தமிழர் அரசியல் அரங்கில் ஜனநாயக அரசியல் சத்திகள் பலப்படவேண்டியதன் அவசியதை வலியுறுத்தியிருந்தார்.வன்முறை மயப்பட்ட எமது சமூகச்சூழலில் பாரதப் பிரதமரின் கருத்து மிக முக்கியமானது . 'கத்தியின்றி; ரத்தமின்றி" சுதந்திரப்போராட்மொன்றை மாபெரும் மக்களியக்கத்தை நடத்திய மாபெரும் நாட்டின் தலைவரின் இக் கூற்று எம்மைப்பொறுத்தவரையில் மிகமுக்கிமானது.பல்லுக்குப் பல் கண்ணுக்கு கண் இலக்கற்ற தறிகெட்ட வன்முறை மனிதவாழ்வு கெடுபிடியானதாகவும், ஈவிரக்கமற்றதாகவும,; காட்டு மிராண்டித்தனமாகவும் மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வார்த்தைகள் முக்கியமானவை. நாம் மனிதர்களாக நடந்து கொண்டு உரிமைகளுக்காகப் போராடவேண்டும்.யாரையும் புண்படுத்துவதற்காக இதனை எழுதவில்லை. நாம் உண்மைகளையும், மானிட சமூக நியதிகளையும் புரிந்து கொள்ள முயல்வோம் . ஏனெனில் ஒரு சமூகம் அழிந்துகொண்டிருக்கிறது. மன்னியுங்கள்! இது அகதித் தமிழனின் சமூக வேதனை.
நன்றி:தமிழ்நியூஸ்வெப்

படையினர் புலிகள் கிளாலியில் மோதல்

யாழ்ப்பாணம் கிளாலிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை மோதல் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு பகுதியை நோக்கி படையினர் திடீர் தாக்குதலை நடத்தியதையடுத்து புலிகளும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த மோதலில் 15 புலிகள் பலியாகியுள்ளதாகவும் தாக்குதலையடுத்து இடம்பெற்ற தேடுக்à நடவடிக்கையில் இரு பெண் புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது தாக்குதலை அடுத்து படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண் புலி உறுப்பினர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாலை 4 மணி>யளவில் கிளாலி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளது பாதுகாப்பு முன்னரங்கு நிலையின் மீது படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர். இராணுவத்தின் 53ஆம் இலக்கப் படையணியினரே இத்தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலின் போது 15 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக புலிகளின் தகவல் பரிமாற்றத்தின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த தாக்குதலை அடுத்து படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது இரு பெண் புலி உறுப்பினர்களது சடலங்கள் உட்பட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. படையினர் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து அப்பகுதியில் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் பதில் தாக்குதலை நடத்தியபோதிலும் அதனால் படையினருக்கு எவ்விதச் சேதங்களும் ஏற்படவில்லை. புலி உறுப்பினர்களின் தாக்குதலை அடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையில் சுமார் இரண்டு மணிநேரங்கள் வரையில் மோதல்கள் இடம்பெற்றன. இம்மோதல்களின் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது படையினரால் மோட்டார் மற்றும் ஷெல் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இரு தரப்பு மோதலை அடுத்து அப்பகுதிகளில் படையினரால் தொடர்ந்தும் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிளாலியில் கொல்லப்பட்ட இரண்டு இளம்பெண் புலிகளின் சடலங்கள், யாழ்ப்பாண வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் கிளாலியில் நேற்றுக்காலை ராணுவக் கொடாண்டோ படையினர் நடாத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு பெண்புலிகளினதும் சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.நேற்றையதினம் அதிகாலை கிளாலி முன்னரங்க பகுயில் முன்னேறிய படையினர் புலிகளின் பதுங்கு குழிகளை நிர்மூலமாக்கியிருந்தனர். இத்தாக்குதலில் 15 புலிகள் கொல்லப்பட்டதுடன் இருவரினது சடலங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியிருந்ததாக ராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இதன்தொடர்ச்சியாக படையினரால் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரு பெண்புலிகளின் சடலங்களையும் அடையாளம் காண்பதற்காக, யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்தநிலையில் குறித்த பெண்புலிகளின் சடலங்கள் இரண்டும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பதற்காக 5 நாட்களுக்கு வைக்கப்படவுள்ளன. இளம் வயதுள்ள இருபெண் புலிகளில் ஒருவரது சடலம் புலிகளின் சீருடையுடனும், மற்றவரின் சடலம் சாதாரண உடையிலும் காணப்படுவதாக யாழ் பொதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர் சாவுக்கு பயந்த கோழை.புலி உறுப்பினர்கள் அரச படையினரிடம் சரணடையவேண்டும்

யாராகினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது எனக்கூறினால் அது முற்றிலும் தவறானதாகும் அவர் தனது உயிரின் மேல் அபார ஆசை கொண்டவர், சாவுக்கு பயந்த கோழை அதனாலேயே தன்னை சூழ பலரையும் வைத்துக்கொண்டுள்ளார் என தமிழ் மக்கள் விடுதலை முன்னனி தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.இவ்வாறான சூழ்நிலையில் ஒருபோதும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை புலிகளால் காப்பாற்றிக்கொள்ள முடியாது எனவும் பிரபாகரன் இந்தோனேசியா அல்லது காம்போடியாவிற்கு பாய்ந்து செல்ல ஏற்பாடுகள் நடப்பதாக தனக்கு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தமது இறுதி போராட்டத்தின் போது புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கக் கூடும் எனவும், தான் புலிகளோடு இருந்தபோது இராசயன ஆயுதங்கள் பல இருந்ததாகவும் இதுவரை புலிகள் அவற்றைப் பயன்படுத்தவில்லை எனவும் லக்பிம ஊடகவிலயலாளரை சந்தித்து பேசிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் இரண்டாம், மூன்றாம் நிலை சிறந்த தலைவர்களை இழந்துள்ளமையயால் அரசின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வடக்கில் பல சமர்களில் தோழ்விகண்டு வருகிறது எனவும் இவர்கள் படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார். பித்துபிடித்துப் போயுள்ள பிரபாகரனின் அறிவுரைகளை கேளாமல் அரச பாடையினரிடம் சரணடைந்து விடுமாரு புலி உறுப்பினர்களை தான் கேட்டுக்கொள்வதாக கருணா கூறியுள்ளார்.-

அநுராதபுரத்தில் துப்பாக்கிச் சூட்டில் இளைஞருருவர் காயம்


அநுரதபுரம் பகுதியில் இன்று காலை இனந்தெரியாத நபர்கள் நடத்திய துபாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளிலில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் அனுராதப்புரம் சந்தயருகே இளைஞரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Sunday, August 10, 2008

முஷாரஃப் தானாக பதவிவிலக வேண்டும் என பாகிஸ்தான் ஆளும் கூட்டணி அறிவுறுத்தல்

பாகிஸ்தான ஆளும் கூட்டணித் தலைவர்கள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் அவர்களைத் தானாகவே பதவிவிலகும்படி அறிவறுத்தியுள்ளார்கள்.
அவரைப் பதவியிலிருந்து அகற்றக்கூடிய குற்றச்சாட்டுகளை இறுதியாக வரையறுக்க அவர்கள் கூடியிருந்தனர்.
முஷாரஃப் அவர்கள் பெரியளவில் முறைதவறி நடந்துள்ளதாகவும், அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாகவும் ஆளும் கூட்டணி குற்றம் சாட்டுகிறது.
அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்தின் முன்பு விரைவில் முன்வைக்கப்படும் என்று கூட்டணி கூறுகிறது.
குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாதிடும் உரிமை அதிபர் முஷாரஃப் அவர்களுக்கு உள்ளது.

புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் கவனத்திற்கு!

வன்னிபோர் முனையில் படுதோல்வியை சந்தித்துவரும் புலிகள் தமது ஆதிக்கத்தில் இருந்த நில பகுதிகளை சிங்கள இராணுவத்திடம் இழந்து தப்பியோடிவருகின்றனர். இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்மக்களை ஏமாற்றி நிதி வசூலிக்கும் கைங்கரியத்தை புலிகளின் வெளிநாட்டு பினாமிகள் இன்னும் கைவிடவில்லை. தமிழீழம் கேட்டு போராடிய புலிகள் புறமுதுகு காட்டி தப்பியோடி வருகின்றபோதும், உண்டியல் புலிகள் தமது வருவாயை பெருக்கி கொள்வதில் துடிப்பு.இறுதி கட்டபோர், மண்பு மீட்பு போர் என்று பல்வேறு பெயர்களில் நிதி வசூலித்த வெளிநாட்டு வாழ் புலி பினாமிகள் அவ் நிதிகளில் வீடுகள், வாகனங்கள, வியாபாரங்கள்; என்று உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வருபவர்களுக்கு உண்டியல் நிதி எங்கே வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற ஏக்கத்தில் புலி இயக்கம் ஊசலாடி கொண்டிருக்கையிலாவது இயன்றளவு நிதியை வசூலித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றனர்.போலி பிராச்சாரங்களையும், பசப்பு வார்;த்தைகளையும் கூறி நிதி வசூலிப்பதில் தீவிரமாய் உள்ளனர். அன்பார்ந்த மக்களே நீங்கள் வழங்கும் இவ் நிதிகள் ஒன்றும் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தையோ அல்லது பறிபோய் கொண்டுள்ள வன்னிமண்ணையோ காப்பாற்ற உதவாது, மாறாக புலி பினாமிகளின் உல்லாச வாழ்வுக்கே உதவும் என்பதை புரிந்து கொண்டு செயலாற்றுங்கள்.

ஜோர்ஜியா மீது ரஸ்ய விமானங்கள் தாக்குதல் 2000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு

திபிலிஸி, ரஷ்ய யுத்த விமானங்கள் இரண்டாவது நாளாக நேற்று ஜோர்ஜியா மீது குண்டுமாரி பொழிந்து வருவதால் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும், கட்டிடங்கள், வீடுகள் என்பன தீ பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்குமிடையே முழு அளவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா 6000 துருப்புக்களை தரை மார்க்கமாகவும் 4000 துருப்புக்களை கடல் மார்க்கமாகவும் ஜோர்ஜியாவுக்குள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு இரு நாடுகளுக்கும் ஐரோப்பிய யூனியன் உட்பட சர்வதேச சமூகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.ஜோர்ஜிய தலைநகர் திபிலிஸியில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையிலுள்ள இராணுவ விமானத் தளமொன்று ரஷ்ய படையினரால் நேற்று தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஜோர்ஜியாவிலுள்ள சிவிலியன் இலக்குகள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது டசின் கணக்கான யுத்த விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரஷ்ய குண்டு வீச்சு விமானங்கள் மேற்கொண்டு வரும் கடும் தாக்குதல்களையடுத்து ஜோர்ஜியா யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.ஜோர்ஜியா மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதல் அபாயகரமான யுத்த விஸ்தரிப்புக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார். ஜோர்ஜியா மீது ரஷ்யா முழு அளவிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கு வழிகோலியுள்ளது என ஜோர்ஜிய ஜனாதிபதி கூறியுள்ளார்.இதேவேளை, ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்துள்ள பிராந்தியமான தென் ஒசீசியாவிலிருந்து ஜோர்ஜியப் படைகளை தான் வெளியேற்றியுள்ளதாகவும் தென் ஒசீசியாவுடன் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும் வகையிலேயே படை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ரஷ்யா கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது. தனது சொந்த மக்களுக்கு எதிராகவே ஜோர்ஜியா குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது என்று ரஷ்ய பிரதமர், ஜோர்ஜியா மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தெற்கு ஒசீசியாவிலுள்ள கிராமங்களில் இன அழித்தொழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் ரஷ்யா, ஜோர்ஜியாவை கண்டித்துள்ளது. இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி என்ற முறையில் ரஷ்ய பிரஜைகள் எங்கிருந்தாலும் அவர்களைப் பாதுகாப்பது எனது கடமை. அதனையே நாம் இப்போது மேற்கொண்டு வருகின்றோம் என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார். 1990 களின் முற்பகுதியில் இழந்த தென் ஒசீசியா மாகாணத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஜோர்ஜியா முனைகின்றது. இதேவேளை, தெற்கு ஒசீசிய பிரிவினை வாதிகளுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் ரஷ்யா ஆதரவளித்து வருகின்றது.தென் ஒசீசியா, மாகாணம் ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும், அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போராளிகளுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதால் அமெரிக்கா, கொசோவோ போன்று அதற்கு சுதந்திரமளிக்க மறுக்கிறது. மாறாக அப்போராளிகளை அடக்கி ஜோர்ஜிய அரசை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பிராந்தியத்தில் ரஷ்யாவை நெருங்கி தனது இராணுவ திட்டங்களை நகர்த்த அமெரிக்கா முனைகிறது. இதற்கிடையே சர்சைக்குரிய பகுதியில் ரஷ்ய அமைதிகாப்புப் படையினர் நிலை கொண்டிருப்பதுடன் சண்டை ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னர் தான் ஜோர்ஜிய அரசும் போராளிகளும் ரஷ்யாவின் மேற்பார்வையின் கீழ் போர் நிறுத்த சமரசத்துக்கு உடன்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அச்சமரசத் திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்ட ஜோர்ஜிய அரசு, போராளிகளின் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான அரசு நடப்பதாகக் கூறி படை எடுப்பை செய்துள்ளது. இதனிடையே, ஜோர்ஜியாவின் ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக ஜோர்ஜிய ஜனாதிபதி மிக்கையில் சகஸ்விலி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முற்று முழுதான இன அழிப்பு நடவடிக்கையில் ஜோர்ஜியா ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய பிரதமர் விளாடின் புட்டின் கூறியுள்ளார். மேலும், தென் ஒசீசியாவிலிருந்தும் பெரும் எண்ணிக்கையான அகதிகள் ரஷ்யாவை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ரஷ்யா பிரிவினைவாதிகளுக்கு உதவி வருவதாகவும், தென் ஒசீசியா மாகாண பிரிவினை வாதிகள் யுத்த நிறுத்தத்தை மீறி மேற்கொண்ட ஆட்லறி ஷெல் தாக்குதலில் அமைதிப்படையினர் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இவற்றுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருவதாகவும் ஜோர்ஜியா குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், 30க்கும் அதிகமான ரஷ்ய தாங்கிகளை தாங்கள் அழித்துள்ளதுடன், 10 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஜோர்ஜியாவில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள பகுதி தெற்கு ஒசீசியாவாகும். ஜோர்ஜியாவில் இருந்து இந்த பகுதியை பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரி பிரிவினைவாதிகள் போராடி வருகின்றனர். அண்மைகாலமாக அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக ஜோர்ஜியா மாறி வருவதால், தெற்கு ஒசீசியா பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சனியன்று தெற்கு ஒசீசியா பகுதியில் செயற்படும் பிரிவினைவாதிகள் மீது ஜோர்ஜியா இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து தலைநகர் டிக்சின்வாலியில் இரு தரப்பினருக்கும் இடையே உக்கிரமான சண்டை வெடித்தது. நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக இந்த சண்டை நீடித்தது. இதற்கிடையே தெற்கு ஒசீசியா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தங்கள் இராணுவத்தை சேர்ந்த 10 வீரர்களை ஜோர்ஜியா இராணுவம் கொன்று விட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தின் தரைப்படை பிரிவு ஒன்று சனிக்கிழமை தெற்கு ஒசீசியா பகுதிக்குள் அதிரடியாக பிரவேசித்தது. மேலும் ஜோர்ஜியா தலைநகர் திபிசிலியின் புறநகர் பகுதியில் உள்ள வாசியானி இராணுவ தளம் மீது ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. பாகுடிபிசிலிசிகான் எண்ணெய் குழாய் செல்லும் பகுதியில் இந்த குண்டுகள் விழுந்து வெடித்தன. இது தவிர வேறு இரண்டு இராணுவ தளங்களும், கருங்கடல் பகுதியில் உள்ள போதிலும் துறைமுகமும் ரஷ்ய குண்டுவீச்சுக்கு ஆளாகியது. இதில் துறைமுகத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த எண்ணெய் கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. கப்பல் கட்டும் தொழிற்சாலை முற்றிலும் சேதம் அடைந்தது. 8 முதல் 11 ரஷ்ய விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன என்று ஜோர்ஜியா பொருளாதார வளர்ச்சி துணை அமைச்சர் வாடோ கூறினார். தெற்கு ஒசீசியா பகுதியில் நடைபெறும் சண்டை மற்றும் ரஷ்ய விமானங்களின் குண்டுவீச்சு ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று ஜோர்ஜியா உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் உதியாஸ்விலி தெரிவித்தார். பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாலேயே நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம் என்று அவர் கூறினார். ஆனால் ஜோர்ஜியா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தெற்கு ஒசீசியா பகுதியில் நடைபெறும் இந்த மோதலால், ஜோர்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் முழு அளவில் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே ஜோர்ஜியா மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. ஜோர்ஜியாவின் இறையாண்மையை ரஷ்யா மதித்து நடக்க வேண்டும். அந்த நாட்டுக்குள் அனுப்பி உள்ள படைப்பிரிவை வாபஸ் பெற வேண்டும். சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தனது சிறப்பு தூதரை அனுப்பி வைக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீஸா ரைஸ் தெரிவித்தார்.

வன்னிப்பகுதியில் அடிப்படை மருந்துகளுக்கும் அத்தியாவசிய உணவுகளுக்கும் பாரிய தட்டுப்பாடு 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா


வடக்கு பிரதேசத்தின் முன்னரங்க நிலைகளில் கடும் மோட்டார் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்கள் இடம்பெறுவதோடு, வன்னிப் பகுதியினுள் கிளேமோர் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வன்னியினுள் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. முகவர் அமைப்புக்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. வன்னிப் பிரதேசத்தினுள் உள்ள வைத்தியசாலைகளில் அடிப்படை மருந்துகளுக்குக் கூட பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அது மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வன்னியில் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் நிவாரண உதவிகள், உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு செயற்பட்டு வரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.இந்த நிலையில் வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பக ஐ.நா. முகவர் அமைப்புக்களின் நிலையியற் குழு வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வட பகுதியின் முன்னரங்க நிலையில் கடும் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களும் இடம்பெற்று வருவதோடு வன்னிப் பகுதியினுள் கிளைமோர் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. மன்னாரின் வெள்ளாங்குளம், முழங்காவில் பகுதிகளிலும் ஓடங்குளம், கல்விளான், மல்லாவி, துணுக்காய் பகுதிகளிலும் இரு தரப்புக்குமிடையில் கடுமையான நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து மக்கள் முற்றாக வெளியேறி கிளிநொச்சி மாவட்டத்தின் மையப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார் மாவட்ட செயலகத்தின் மதிப்பீட்டின் படி இறுதியாக 6,217 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 797 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஏற்கனவே இடம்பெயர்ந்த மடு, பண்டி விரிச்சான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை. மடு, மாந்தை மேற்கு பிரதேச செயலகங்கள், அடம்பன், மடு வைத்தியசாலைகள், மடு கல்வி வலயம் என்பன கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதேவேளை, கிளிநொச்சியின் கரைச்சி பிரதேச செயலகப் பகுதியைச் சேர்ந்த 9 ஆயிரத்து 392 குடும்பங்களும் பூநகரிப் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்து 291 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட செயலகத் த கவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற நிலைமையே முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணப்படுவதாகவும் அங்கு சமார் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வன்னியிலுள்ள வைத்தியசாலைகளில் பென்சிலின் ஊசி மருந்துகள், மெட்போர்மின், அஸ்ட்ரோவாஸ்ட்டெயின், போலிக் அசிட், பண்டேஜ், கோஸ், ஸ்பிறிற் உள்ளிட்ட அவசர வேளைகளில் உபயோகிக்கப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேவேளை அங்குள்ள வைத்தியசாலைகளில் சாதாரண நிலையில் தேவைப்படும் அடிப்படை மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான பணிகளை ஆற்றுவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஓமந்தை ஊடான ஒரேயொரு பாதை மாத்திரமே தற்போது உள்ளதால் விநியோகத்தில் பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வன்னியில் அத்தியாவசிய உணவுகள், நிவாரணப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. உலக உணவுத் திட்டம், யுனிசெப் உள்ளிட்ட ஐ.நா. முகவர் அமைப்புகளும் பல்வேறு சர்வதேச மனித நேய தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி நொண்டிக்குதிரை இதனாலேயே அரசுடன் இணைந்துள்ளோம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார

பெல்மதுளை ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய நிலையில் நொண்டிக் குதிரையாகவுள்ளது. அக்குதிரையில் ஓட முடியாது. தற்போது ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் திகழ்கிறது. இதனால்தான் நாம் அரசுடன் இணைந்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
யானைக்கு மேல் சேவல் போகலாம் கதிரை மற்றும் வெற்றிலைக்கு மேலும் சேவல் போகலாம். ஆனால் சேவலுக்கு மேல் எதுவும் பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இறக்குவானையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனிப்பட்ட ஒருவருக்காக செயற்படாது மலையக சமூக நலன் கருதியே அன்று தொடக்கம் இன்றுவரை செயற்படுகின்றது. மலையக மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய எண்ணுபவர்கள் இ.தொ.கா.வுடன் இணைந்தும் கொள்வார்கள். சுயநல நோக்கமுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள்.
யார் வேண்டுமென்றாலும் வரலாம் போகலாம். ஆனால் இ.தொ.கா தலைநிமிர்ந்து நிற்கும். அதற்கு மக்களின் பேராதரவு உள்ளது. நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது குறித்து விமர்சனம் செய்யப்படுகின்றது. நாம் சிறுபான்மையினத்தவர்கள். தனியாக ஆட்சி அமைக்க முடியாது. ஜனாதிபதியாகவோ,பிரதமராகவோ பதவி வகிக்க முடியாது. ஆனால் அரசாங்கம் யார் என்பதனை தீர்மானிக்க முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே. கட்சியை ஆதரித்தோம். அக்கட்சி வெற்றி பெறவில்லை. நாம் எவ்வளவுதான் உதவி செய்தாலும் அக்கட்சி வெற்றி பெற முடியாத நிலையில் நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளோம்.
ஐ.தே.க. தற்போதைய நிலையில் ஒரு நொண்டிக் குதிரை. அக்குதிரையில் ஓட முடியாது. ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் திகழ்கின்றது. இதனால்தான் நாம் அரசில் இணைந்துள்ளோம். இதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். இதனை தெரியாதவர்கள் தான் எம்மை விமர்சனம் செய்கின்றனர்.
சாதாரணமானவர்கள் கூட ஓடும் வெற்றி பெறும் குதிரைகளையே மட்டுமே விரும்புவார்கள். நொண்டிக் குதிரையை விரும்பமாட்டார்கள். நாமும் அதனை செய்கின்றோம். மேலும் யானைக்கு மேல் சேவல் போகலாம். அல்லது குதிரைக்குமேல் வெற்றிலைக்கு மேல் சேவல் பயணம் செய்யலாம். எனினும் சேவலுக்கு மேல் எதனையும் பயணம் செய்ய இ.தொ.கா என்றுமே அனுமதிக்காது.மத்திய, ஊவா மாகாணங்களிலும் இ.தொ.கா. ஆட்சியை அமைக்கும் சக்தியாகவுள்ளது. அதேபோல் சப்ரகமுவ மாகாணத்திலும் இந்த நிலை ஏற்பட எதிர்வரும் 23 ஆம் திகதி காலையில் முருகனை கும்பிட்டு விட்டு சேவலுக்கு வாக்களித்து நமது ஒற்றுமையையும் மலையக சமூகத்தின் பலத்தையும் நிரூபிக்குமாறு வேண்டுகின்றேன்.
இங்கு பிரதி அமைச்சர்களான எம். சச்சிதானந்தன், ஜெகதீஸ்வரன், முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்

One shot and another disappeared in A'pura district election violence

One supporter of United National Party (UNP) Chief Minister candidate Major General Janaka Perera was hospitalized with serious gun shot injuries as a gang of goons shot at the vehicle the victim was travelling with other supporters. Another youth who was in the vehicle was disappeared. The firing took place around 1.30 AM today (09) close to the New Bus Stand of Anuradhapura. A spokesman of Anuradhapura hospital said that the victim Sampath Jayasinghe (18) was undergone a surgery today (09). A police spokesman said that the disappeared person was believed to be taken away by the goons.
The survivors said that the two vehicles that were engaged in the attack, a green color vehicle and a white Defender, collided at the scene of crime. They say that a back up vehicle of a VIP security squad passed the scene a moment later.

சிவலோக சிவபெருமானே! நமது நாட்டில என்ன நடக்குது என்று கொஞ்சம் கேளுங்கோ!! - நாரதர்

தமிழ் தேசிய கூத்தமைப்பு பாராளுமன்ற குழு பிரதி தலைவரும், பயங்கரவாத பிரபாகரனின் பங்காளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசா என்பவர் கொழும்பிலிருந்து வெளிவரும் (புலிப்பினாமி) பத்திரிகை ஒன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்திருக்கிறாருங்கோ. அவருடைய அறிக்கை என்னவென்றாலுங்கோ மனிதாபிமான உரிமைகளைபற்றி பேசாமல் பயங்கரவாதத்தை மட்டும் ஒழிப்பதற்காக சார்க் மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் தங்களுக்கு கவலையளிக்கிறதாம் என்கிறாருங்கோ. அந்த அவரின் அறிக்கையை பிரசுரித்த புலி பத்திரிகையானது முன்பக்கத்தில் பெரிய கொட்டை எழுத்தில் போட்டு அவரின் அறிக்கையை பிசுரித்திருக்கிறார்களுங்கோ.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கவலைப்படுகின்ற ஒருவர் உலகத்தில் இருக்கிறார் என்றால் அவர் மாவை சேனாதிராசாவாகத்தான் இருப்பாருங்

ஏ 32 வீதி திறக்கப்படவுள்ளது- அமைச்சர் கெஹலியரம்புக்வெல

நாட்டின் எல்லா பாகங்களிலும் இருந்து மக்கள் வடக்கிற்கு செல்லுவதற்கான மாற்று தரை வழி போக்குவரத்து பாதையினை திறந்து வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹலியரம்புக்வெல தெரிவித்தார்.
வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூநகரி,கிளிநொச்சி மாவட்டங்கள் வெகுவிரைவில் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும், அதன் பின்பு நாட்டின் எல்லா பாகங்களிலும் இருந்து மக்கள் வடக்கிற்கு செல்லுவதற்கான மாற்று போக்குவரத்து பாதையான ஏ 32 வீதி திறக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும்தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் சமாதானத்திற்கு இணங்காததால் கொழும்பிற்கான தரை வழி போக்குவரத்து பாதையாக ஏ9 வீதி மூடப்பட்டது.
இதேவேளை விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய கடற்தளம் வட மேற்கு கரையோரத்தில் உள்ள விடத்தல்தீவில் அமைந்துள்ளது. இது தற்போது எமது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் இதனூடாக பூநகரிக்கான மாற்று போக்குவரத்து பாதையான ஏ 32 வீதி திறக்கப்படுவதற்றகான வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் மேலும்தெரிவித்தார்.

ஆறு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் கைது

ஆறு விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ்நாட்டு பொலிஸார் நேற்று(09) சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்வர்களிடமிருந்து போலி வாகன இலக்க தகடுகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் மீளவும் தமது வலையமைப்பினை உருவாக்க முயுற்சிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.